
உனக்கென்ன...?
சுலபமாக உள் நுழைந்துவிட்டாய்?
நானல்லவா....
எரிமலையாகக்
குமுறிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை....
உனக்கு,
இதெல்லாம் மிகச்சாதாரணமாய்...
இருக்கலாம்.
சிறுபிள்ளைத்தனமாய்த்
தோன்றலாம்.
புரியாமலும் போகலாம்.
மீண்டும் எனக்கு என்னவோ செய்கிறது.
நான் ஒரு பெரும் மூடன்...
முட்டாள் என்பதும் புரிகிறது.
ஏனடி வந்தாய்?
இப்படித் துன்புறுத்துகிறாய்?
கண்ணீரைத் துடைக்கிறேன் என்று வந்துவிட்டு...
இப்படி....
அதிகமாக்கி விட்டாயே.
போ.. போ...
நலமாயிரு.
இது எனது விதிப்பயன்.
தீர்க்க முடியாததென்பது எதுவுமில்லைதான்.
நான் என் வழியில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
ஆமாம்.....
சில் விஷயங்களை...
வெளிப்படையாக...
சொல்லவே முடியாது.
வலிகளிலேயே....
மிகக் கொடூரமானது...
மனம் சம்பந்தப் பட்டதுதான்.
நீ தோற்றுப் போய்...,
வெற்றியடைந்துவிட்டாய்.
நான்................
ஆகட்டும்.... ஆகட்டும்....!
%5B1%5D.jpg)