• எதையும் தெளிவாகக் கற்றுக்கொள். அதை அனுபவித்து மகிழ். மகிழ்ச்சியாக இரு.

  • நீ கடவுள் மீது கூட நம்பிக்கை வைக்க வேண்டாம். உன்னிடம் நம்பிக்கை வைத்தால் போதும்.

  • ஏனெனில், நீயும் ஒரு தெய்வம்தான். -ஸ்ரீ சத்ய சாய்பாபா
  • இருப்பவற்றுக்காக சந்தோஷப் படுகிறேன்.

    1:20 AM Posted In , , Edit This 6 Comments »



    வாழ்வின் ஜீவாதாரமாக நான் எண்ணியிருந்த ஒரு ஜீவனின் இழப்பு காரணமாக...

    என் சமீப இடுகைகளில்...
    சற்று அதிகப்படியான சோகம் வழிந்திருக்கலாம்.

    எத்தனை இழப்பாயினும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்... எனும் தெளிவு பெறச் சற்று நேரம் பிடிக்கத்தான் செய்தது.

    என்னதான் பாசிட்டிவ் அந்தோணிமுத்து என மார்தட்டிக் கொண்டாலும்,
    மானுட பிறவிகளுக்கே உரித்தான பலகீனத்தைத் தவிர்க்க முடியவில்லை...

    அன்பான நட்புக்களின் இடைவிடாத ஆறுதலினாலும், அறிவுறுத்தல்களினாலும்...
    இப்போது முழுமையாக மீண்டு வந்து விட்டேன்.

    இதற்கு முழுமையாக உதவியவர்கள்...
    என் வாழ்வின் வழிகாட்டி என நான் அழைக்கும், ஜெய்ப்பூர் வாழ் தலைமை ஆசிரியை அருணா அவர்கள்.

    அவர்களுக்கு என் இதய பூர்வமான நன்றிகள்.

    இழப்பு குறித்தான சுய இரக்கம் தேவையற்றது.

    போனவை போகட்டும்.

    மீதமிருக்கும் என் புதையல்களை, பொக்கிஷங்களை...
    எண்ணத் துவங்கியிருக்கிறேன்.

    இவற்றை எனக்குக் கொடுத்த எல்லாம் வல்ல இறைக்கு நன்றி.

    ஒரு தெரு நாயின் பிரார்த்தனை..!

    11:00 PM Posted In , , , , Edit This 3 Comments »


    அம்மா அப்பா ஆருமில்ல..!

    அவங்களுமில்ல இவங்களுமில்ல..!

    அன்பு காட்ட ஆரிருக்கா..?

    ஆண்டவா ஒன்னத் தவிர..!

    அல்லாரும் உட்ட மாதிரி...

    நீயும் கை உட்டுப் போயிடாதே..!

    நொண்டிப் பொம்மை..!

    2:17 PM Posted In , , , Edit This 5 Comments »


    நேற்றுத் தெருவோரம்...
    குப்பைகளோடு...

    காலிழந்து...
    தலையில்லாமல்...
    கேட்பாரற்று கிடந்தது...

    ஏதேனும் ஒரு குழந்தை அதை...
    கொஞ்சிக் கொஞ்சி விளையாடி...

    "என்னுது..!
    யாரும் தொடக்கூடாதூ..!"

    எனக் குளிப்பாட்டி...
    பவுடர் பூசி...
    பொட்டு வைத்து...
    அழகு பார்த்து...

    இன்று வளர்ந்து விட்டதால்...
    பள்ளி செல்லத் தொடங்கியதால்...
    நண்பர்கள் கிடைத்து விட்டதால்...
    அல்லது...
    பொம்மை பழமையானாதால்...
    அப்பா அம்மா திட்டியதால்...
    அங்கஹீனம் பிடிக்காததால்...

    தூக்கி எறிந்து விட்டிருக்கலாம்.

    சட்டென்று நினைவு வர...
    இல்லாத என் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு...
    மௌனமாய்...
    நகர ஆரம்பித்தேன்..!