GIVE & RECEIVE FULL

Custom Search

Saturday, March 15, 2008

22) விகடனுக்கு ஆனந்த நன்றிகள்...!இநத வாரம் 19-03-2008 தேதியிட்ட ஆனந்த விகடனில் வந்த கட்டுரையைப் பார்த்துவிட்டு பலபேர் பாராட்டுகிறார்கள்.

Mail அனுப்புகிறார்கள்.

என்னைப் பார்த்து பலர், தங்களின் மனத்தில் தன்னம்பிக்கையை வளர்த்திருக்கிறார்கள்.

என்னுடைய இந்த நிலைக்காக இப்போது மிக மிக சந்தோஷப் படுகிறேன்.

உதாரணத்திற்கு சிலரின் வார்த்தைகளை இங்கே தந்திருக்கிறேன்.

மனசெல்லாம் திகட்டத்திகட்ட இனிப்பு சாப்பிட்டதைப்போல உணர்கிறேன்.

நான் சிலருக்கு ஒரு உத்வேகத்தை அளித்திருக்கிறேன் என்கிற ஒரு மனநிறைவு போதும்.

என் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும்..., வெளிச் சொல்ல இயலாத மனக்காயங்களுக்கும்...
ஏதோ ஓர் அர்த்தம் கிடைத்திருப்பதை அறிகிறேன்.

இதே போல மனநிறைவு கிடைக்குமெனில்...
இன்னும் எத்தனை பிறவி வேண்டுமானாலும்...
இந்நிலையை ஏற்கச் சித்தமாயிருக்கிறேன்.

என்னுடைய கர்ணனைப் போல நானும் இந்த உலகத்திற்கு என்னிடமிருந்து ஏதோ ஒன்றைக் கொடுக்க முடிந்ததில்...
மிகச் சந்தோஷம்.

என்னுடைய அத்தியாவசியத் தேவைகள் இன்னும் சில நிறைவேறவில்லை.

1) மாதம் ஒரு நிலையான வருமானம்.
2) Laptop.
3) Powered Wheel Chair.

என் தேவைகளுக்காக கடவுளிடம் வேண்டி கீழே ஒரு கடிதமும் எழுதியிருக்கிறேன்.

கடவுள் பதில் கொடுக்க கொஞ்ச தாமதமாகிறதென்பது புரிகிறது.

ஆனால் நிச்சயமாக பதில் வருமென்று உறுதியாய் நம்புகிறேன்.


எனக்கு உதவுவதில் முனைப்பாய் உள்ள அனைத்து வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கும் குறிப்பாக, என்றென்றும் அன்புடன் பாலா அண்ணன் அவர்களுக்கும் என் ஆழ்மன நன்றிகள்.

எனது இல்லத்திற்குச் சென்று, விகடனைப் படிக்க, இங்கே Click செய்யவும்.

விகடனுக்கு எனது ஆனந்த நன்றிகள்.

Here are some of the inspired:

1) பாக்கியராசன் சேதுராமலிங்கம்... said...
வணக்கம் தல,

கொஞ்ச நாளாவே நம்ம வாழ்கைல கொஞ்சம் பிரச்சனை...வேலை இல்லை... அமெரிக்கா வந்து வேலை இல்லாம இருக்குறது நான் மட்டும் தான்னு நெனைக்கிறேன்.. என் ஆங்கில புலமையோ இல்ல, தொழில்நுட்ப புலமையோ சரி இல்லாம வேலை கிடைக்கிறது தள்ளி போய்கிட்டே இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா என் மேல எனக்கு இருந்த நம்பிக்கை போகிட்டே இருக்குது...

இந்த நேரத்துல தான் உங்க வலைபூ பார்த்தேன்... உங்கள பற்றியும் படிச்சேன், ஏற்கனவே படிச்சிருந்தாலும் திருப்பியும் பாரதி கவிதையும் படிச்சேன்... மனசுல கொஞ்சம் தெம்பு திரும்பி வந்திருக்கு... அடிச்சு வேலை வாங்குறோம்.. சரி தானா தல...

ரெம்ப நன்றி தல...
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...


2) Vijay Athreyan... said
Hi Muthu,
I’ve seen your interview in Anandha vikatan, Just inspired and logged in to your blog. Amazed….. Wonderful.. Keep up your Work.


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

10 comments:

Aruna said...

hi,
you will be an icon to inspire others Antony!You have unbelievable intelligenc, you will have opportunities fall out of the sky to inspire and serve others. You have the enduring characteristics of a successful person.Keep inspiring!!
anbudan aruna

வினையூக்கி said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள் நண்பா.

Janani Venkett said...

All the Best!!!
Janani

meenamuthu said...

உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது மனது!

உங்கள் அக்கா!
இறைவன் கொடுத்த வரம்

சிறு விஷயங்களுக்கெல்லாம் துவண்டு போகும் உள்ளங்கள் உங்களைப்படித்து
துணிவுகொள்ளும்!

அந்தோணி முத்துவின் எண்ணங்கள் அனைத்தும் நிறவேறும். நிறைவேற பிரார்த்திக்கிறேன்.

-மீனா

-மீனா

N Suresh said...

உந்தன் சந்தோஷத்தில்
உன்னைவிட எனக்குள்ள
ஆனந்தம் நீ அறிவாய் என் தம்பி!

அதிக நேரமுண்டு உனக்கு
அடுத்தவனுக்காய பிரார்த்தனை செய்ய!

விகடனில் உந்தன் பதிவு
எத்தனை ஆனந்தம்
இந்த உலகமெங்கும்!

எத்தனையோ உயிர்களை
நீ தற்கொலைகளிலிருந்து காப்பாற்றுகிறாய்!

நீ வாழ்வதால்
பலர் வாழ்கிறார்கள்

கழுத்திலிருந்து செயலிழந்தால் என்ன
கைகளும் தலையும் உள்ளதே - என்ற
உந்தன் சிரிப்பு
ஒரு முழு நூலகத்தை
என் மனதிற்கு பரிசளித்து மகிழ்கிறது!

உனக்காய் அழுதேன் பல நாள்
இன்றும் அழுகிறேன்
ஆனால் இன்று இனி மேல
ஆனந்தத்தால்!

இறைவனின் பார்வையில்
எல்லோரும் அவரின் குழந்தைகளே
அவரின் நல்லதொரு நோக்கமில்லாமல்
யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை!

கனவுகள் யாவும் நீ வென்றிடுவாய்
பணம் உனக்கு அடிமையாகும்
பலருக்கு நீ உதவும் காலம் வரும்
அந்த நாள் விரைவில் வந்திட
என் இனிய பிரார்த்தனைகள்
என் அன்புத் தம்பி

பாசாமுடன்
அண்ணன்

kannan said...

Hi Anthony,

Great!I read about in anandha vikatan.You wrote your wishes in writing know,you will get them fulfilled,it is called "law of attraction".Google it.
You can do whatever you want.
believe in yourself.
Tough times won't last,but tough people will do.
All the best!
best wishes,
kannan
http://www.growingself.blogspot.com

kitchaa said...

என் இனிய நண்பன் அன்தொன்யே உமக்கு என் மன மர்ந்த வாழ்த்துகள் .
உம்மை பற்றி விகடனில் வாசித்தேன் , மிகவும் பிரமிப்பாகவும் , ஊகம் அளிபதகவும் இருந்தது . நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துகள்

இளைய கவி said...

மதிப்பிற்குறிய அந்தோணி,

தமிழச்சியின் பக்கங்கள் மூலம் எனக்கு தங்களை முன்பே தெரியும் .. ஆனந்த விகடனில் நட்சத்திரமாய் ஜொலித்தீர்கள் வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் முயற்ச்சி..

என்றும் அன்புடன்
இளையகவி

Anonymous said...

அன்புள்ள அந்தோணி!

உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் !

//இறைவனின் பார்வையில்
எல்லோரும் அவரின் குழந்தைகளே
அவரின் நல்லதொரு நோக்கமில்லாமல்
யாருக்கும் இங்கு வாழ்க்கையில்லை!

கனவுகள் யாவும் நீ வென்றிடுவாய்
பணம் உனக்கு அடிமையாகும்
பலருக்கு நீ உதவும் காலம் வரும்
அந்த நாள் விரைவில் வந்திட
என் இனிய பிரார்த்தனைகள்
என் அன்புத் தம்பி

பாசாமுடன்
அண்ணன் //

உங்கள் அண்ணன் கண்ட கனவும் நனவாக வாழ்துக்கள் !

அன்புடன்,

P B முரளி கிருஷ்ணன்
திருவண்ணாமலை

Anonymous said...

அன்புத் தோழா,

உன் வாழ்வினை படிப்பினையாகக் கொள்ளும் எண்ணற்றோர் உண்டு. வேதனையும், வலியும் இல்லா வாழ்வும் சுகிக்குமோ ? அவைகள் வாழ்வினை அர்த்தமுள்ளதாக்கும். சுவை கூட்டும். இன்று விகடன் நிறுவனத்தாரின் உதவியால் கிடைத்த பணியும், சேரன் அவர்களின் உதவியால் கிடைக்கப்போகும் கால்களும் அந்த வலிகளால் வந்த விடை தானே.

தன்னம்பிக்கையுடன் போராடுபவன் வெற்றியாளனாவான் என்பது உண்மையாதலால் நீங்களும் வாழ்வில் வெற்றி பெற்று சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

விகடன் நிறுவனத்தாருக்கும், மதுரா டிராவல்ஸ் மற்றும் புரட்சி இயக்குனர் சேரன் அவர்களுக்கும் நன்றிகள் பல... தாங்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று , எல்லா வளமும் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தோழன்
தங்கவேலு மாணிக்கதேவர்

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails