
சமீமமாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.
இந்த தளத்தில், நமது தின வரவு செலவுக் கணக்கை பதிவு செய்து வைக்கலாம்.
மாத முடிவில் , ஒவ்வொரு வகை (டேக்) லிம் செலவு செய்ததை காண்பித்து தருகிறது.
இதன் மூலம் நாம் எதில் அதிகம் அல்லது குறைவாக செலவு செய்துள்ளோம் என்பது தெரியவரும்.
நமது சொந்த மற்றும் வீட்டு செலவு கணக்கை பராமரிக்க சிறந்த எளிய வழி.
இதை நாம் உலகின் எந்த மூலையிலிருந்தும்....
எங்கும், எப்போதும் பயன்படுத்தலாம்.
மாணவர்களும், தனி நபர்களும்...இன்னும் யார் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம்
நம் செலவை நாமே திட்டமி்ட்டுக் கொள்ளலாம்.
நமது சுய விபரங்கள், கணக்கு வழக்குகள் அதி ரகசியமாக பாதுகாக்கப் படுகிறது.
இந்த தளத்தில் இலவசமாக நமது கண்க்கை உருவாக்கி பயன் பெறலாம்.
பார்க்க www.ispendin.com http://www.ispendin.com
முயற்சி செய்துதான் பாருங்களேன்....!
விரும்பினால் பிறரும் பயன்பெற ஏதுவாக...
உங்களின் வலைப்பூவில் இந்த தளத்தின் Banner போட்டு வையுங்களேன்.
4 comments:
தலைவர் அந்தோணி,
முதலில் நீங்க இதைத் துவங்கோனம்னு தோணுதுங்க:-)
கணக்கெல்லாம் சரியா இருக்கா:-)
வாழ்த்துகள்
அன்புடன்
என் சுரேஷ்
அன்பு வலைப்பதிவர்களே,
தமிழ் வலைப்பகுதிக்கு நான் புதியவன்.நானும் ஓர் வலைப்பகுதியை தற்காலிகமாக பதிந்து அதை எப்படி கையாள்வது என்பதையும் மற்ற பதிவுகளைப்போல் எப்படி உருவாக்குவது, மெருகேற்றுவது என்று பயிற்சி செய்கிறேன். சந்தேகங்கள் பல உண்டு, உங்களிடம் உதவிக்கு வருவேன்.
நான் பல வலைப்பக்கங்களை பார்வையிட்டேன், படித்தேன்.அதில் இரண்டு வலைப்பக்கங்களை படித்தேன் மனதில் பதித்தேன். மனதை மிகவும் சலனப்படுத்திய பக்கங்கள். வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு அதில் வெற்றி பெற தூண்டும் பக்கங்கள். அப்பக்கங்கள் www.livingsmile.blogspot.com , www.positiveanthonytamil.blogspot.com. இருவருமே அவர் அவர் வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.வித்யா, அந்தோனி உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மீண்டும் வருவேன்.
Hi friend. I heard about you. I pray god for you to face all the problem and get success.always be positive positive..........
This was lovely, thanks for sharing
Post a Comment