
சமீபத்தில் தன்னம்பிக்கை குறித்து ஒரு பதிவு போடலாமென தோன்றியது.
என்னதான் யோசித்து எழுதினாலும், அது முன்பே யாராவது சொன்ன விஷயமாகத்தான் இருக்கும்.
அதுவுமன்றி...
எல்லாமே ஏற்கெனவே உங்களுக்கு அறிமுகமான விஷயமாகத்தான் இருக்கும்.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது....
என் குரு திரு. அழகி. விஷி அவர்களைப் பற்றி நிலாச் சாரலில் படித்த நினைவு வந்தது.
மீண்டும் படித்தேன்.
நீங்களும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள்.
தன்னம்பிக்கையை "டன், டன்" னாய் பெற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் மிக மிக அழகாக சிற்சில வரிகளில் சொல்லியிருக்கிறார்.
நீங்களே இங்கே க்ளிக்கி தெரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் நாம் பலமுறை பலருக்கு பாடம் சொல்லியிருக்கிறோம்.
பாடம் கேட்டிருக்கிறோம்.
ஆயினும்...
வாழ்கையையே ஒரு பாடமாக வாழ்ந்து காட்டுவதென்பது அனைவருக்கும் சாத்தியமா?
மாபெரும் சாதனைகளைச் சாதித்துவிட்டு, அப்படிச் செய்தோம் என்கிற உணர்வே இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா?
அவரது அழகி மென்பொருள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
Technical- ஆக விஷயம் தெரிந்தவர்களுக்குத்தான்...
அழகியின் அருமையையும்... வலிமையையும்... உணர முடியும்.
http://www.azhagi.com/
அழகி ஒரு தனிமனித சாதனை.
கொடூரமான Collitis வியாதியில்...
தான் மெழுகாக உருகிய வேளையிலும் இந்த உலகுக்கு ஒளி தர வேண்டுமென்பதையே
இலட்சியமாகக் கொண்டு சாதித்தவர் இவர்.
Microsoft-ன் Bhasha- வினுடைய பாராட்டை இங்கே க்ளிக்கி படித்துப் பாருங்கள்.
லா. ச. ரா- வின் சிந்தாநதியில் ஒரு வரி வரும்.
"அறிந்தவர் எறியும் பூச்செண்டு அபார மணம்," என்று.
அப்படிப் பூச்செண்டு எறிபவர்களில் ஏன் நீங்களும் ஒருவராய் இருக்கக் கூடாது.
4 comments:
Superb Antony!
இந்தா முதல் பூச்செண்டு என்னிடமிருந்து!! பிடித்துக் கொள்!!!
அன்புடன் அருணா
//Technical- ஆக விஷயம் தெரிந்தவர்களுக்குத்தான்...
அழகியின் அருமையையும்... வலிமையையும்... உணர முடியும்//
தலைவரே,
மிக அழகாக சொன்னீர்கள்.
பல அறிவாளிகளுக்கும் அறியாததை
தலைவர் நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
மிக மிக சந்தோஷப்படுகிறேன்.
வாழ்த்தி மகிழ்கிறேன்.
பாசமுடன்
என் சுரேஷ்
வாழ்த்துக்கள் பல!
Vazhthukkal pala Koodi.
Very impressive product which will ease the work of transliteration.
My Namaskarams to author Vishy.
Good Luck and may I pray the almighty to shower with all goodness and prosperity and for his forthcoming new ventrues on other languages.
- Rajee
Post a Comment