இங்கே கிளிக் செய்து என்னை நேரில் சந்தித்த சுரேஷ் அண்ணனின் கடிதத்தில் புகைப்படத்தையும் அதன் கீழுள்ள 2 வரிகளையும் படிக்கவும்.
சாப்பிடவும், ஏதேனும் எழுதவும் மட்டுமே வலது கை, அதையும் சிரமப்பட்டு... தலையைக் குனிந்து முழங்கையை ஊன்றிய நிலையிலேயே சர்ர்க்கஸ் வித்தைக்கரானைப்போலத்தான் உபயோகிக்க முடியும்.
(முன்பெல்லாம் முன்புறம் குனிந்தபடி இரு முழங்கைகளையும் தொடையில் ஊன்றியபடி மணிக்கணக்கில் ரேடியோ ரிப்பேரிங் செய்து கொண்டிருப்பேன்.)
கடந்த 27 வருடங்களாக இதே நிலைதான்.
கணினி அறிமுகமான இந்த 5 வருடங்களில், இதுவரையில் இடது கையினால் மட்டுமே தட்டச்சி வருகிறேன். இதனால்தான் அடிக்கடி என்னால் பதிவிடவோ, கடிதங்களுக்கு பதிலிடவோ முடிவதில்லை.
மதுரா டிராவல்ஸில் என் பணியை மிகுந்த சிரமத்தோடுதான் செய்து வருகிறேன்.
இப்படித்தான் தினமும் வேலை செய்கிறேன்.


இந்த மட்டுமாவது இறைவன் எனக்கு ஒரு கையையேனும் முழுமையாய் உபயோகிக்கத் தந்திருக்கிறாரே.
உழைத்துப் பிழைக்க ஒரு வேலை கிடைத்திருக்கிறதே.
அன்பு காட்ட நீங்கள் கிடைத்திருக்கிறீர்களே.
எனக்குக் கொடுத்திருக்கும் அனைத்திற்காகவும் இறைவனுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
பி. கு:-
முன்பெல்லாம் வலது கையை ஊன்றியபடியே தொடர்ந்து 18 மணி நேரம் கூட உட்கார்ந்து இருந்திருக்கிறேன்.
இப்போதெல்லாம் அரை மணி கூட உட்கார முடிவதில்லை.
விலா உள்ளுக்குள் கொடூரமாய் வலிக்கிறது. (மார்புக்குக் கீழ் மேல் தோல் மரத்துப் போய் கத்தியால் கிழித்தாலும் வலிக்காது. ஆனால் பசி... உள்ளுறுப்புக்களின் வலி இவை மூளைக்கு எப்படியோ உணர வைக்கப்பட்டு விடுகிறது.)
வலது புறம அடிவயிற்றில் கட்டி போல் உள்ளுக்குள் 24 மணி நேரமும் வலித்தபடியே இருக்கிறது.
1 comment:
உடம்பு சரியாக பிரார்த்தனைகள்.
Post a Comment