கூடு மறந்து
திக்குத் தெரியாமல்
திரிந்தலைகிறது
மாலைப்பறவை!
தாயைத் தொலைத்து,
பார்க்கும் முகங்களிலெல்லாம்...
தேடித் தேடி...
தேம்பியழுகிறது
திருவிழாக்குழந்தை!
என் சுமைகளைத் தாங்கி
ஆறுதல் தந்த உன் தோள்களுக்காக
ஏங்கித் தவிக்கிறது மனம்!
எப்படியும்...
நீ வரப்போவதில்லை எனத் தெரிந்திருந்தும்!
2 comments:
நல்ல கவிதை.
//என் சுமைகளைத் தாங்கி
ஆறுதல் தந்த உன் தோள்களுக்காக
ஏங்கித் தவிக்கிறது மனம்!
எப்படியும்...
நீ வரப்போவதில்லை எனத் தெரிந்திருந்தும்!//
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்
Post a Comment