GIVE & RECEIVE FULL

Custom Search

Sunday, March 23, 2008

அந்தோணி முத்துவின் ஆங்கில வலைப்பூ...


வெகு நாட்களாய் ஆங்கில வலைப்பூ ஒன்று துவங்க வேண்டுமென்ற விருப்பம் இன்று நிறைவேறியிருக்கிறது.

விரும்பினால், நேரமிருப்பின்..., இங்கே கிளிக் செய்து படியுங்கள்....

மிக முக்கிய வேண்டுகோள்.

ஓரிரு வார்த்தைகளேனும் பின்னூட்டமிட்டு ஊக்குவிக்க முயற்சி செய்யுங்கள்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

9 comments:

aruna said...

A very good yet another beginning!
My best wishes and guidance will be there always.Well done!keep going!
anbudan aruna

delphine said...

ஒரு வார்த்தை அல்ல... பல பல..... keep going... I am so much inspired... May God Bless you abundantly

என் சுரேஷ் said...

All the best my dear Guru!!!

love
nsuresh

KingMaker said...

when i red your interview in anantha vikatan I was really fedup and also amazed at your self confidence.
The Almighty is responsible for every thing and your dreams be fulfilled certainly early.
Seeing your blog, i also hust crreated one in name generalZunaid.blogspot.com.
All the best Mr.Anthony.

General said...

Hello Anthony,
when i red your interview in anantha Vikathan i was really fed up and also amazed at your self confidence.The Almighty is responsible for every thing and your dreams be fulfilled earlier.

on seeing your blog, I created a blog for me in the name generalzunaid.blogspot.com
and i wish you a good future.

சேரன் - திரைப்பட இயக்குனர் said...

மதிப்பிற்குரிய அந்தோணிக்கு,
சேரன் (திரைப்பட இயக்குனர்) எழுதுவது.. தங்களைப்பற்றி விகடனில் படித்தேன், நெகிழ்ந்தேன் என்பதைவிட தலை நிமிர்ந்தேன். உங்களுக்கு தலை வணங்கவே இந்தக் கடிதம். உங்களது வாழ்க்கையும், முயற்சியும், தேடல்களும் தன்னம்பிக்கையால் ஒவ்வொரு ஊனமுற்ற மனிதர்களும் வாழமுடியும், உயரமுடியும் என்பதையும் தாண்டி ஒருபடி உயர்ந்து ஒவ்வோரு சாதாரண மனிதனுக்கும் வாழ்க்கைக்கான நம்பிக்கை புத்தகமாக மாறியிருக்கிறது. இணையதளத்தில் நீங்கள் உங்கள் காதலியுடனான காதலையும், கோபத்தையும், விரக்தியையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்தியிருப்பதை படித்தேன். என்னுடைய "ஒவ்வொரு பூக்களுமே" பாடல்தான் ஞாபகம் வந்தது. இதே மனவலிமையோடு உங்களது முயற்சிகளை தொடருங்கள். உங்களின் கனவுகளும், லட்சியங்களும் ஒரு நாள் பிரமிக்கதக்க நிஜங்களாக மாறி உங்கள் கண்முன் நிற்கும்.

நீங்கள் எதையும் சாதிக்க பிறக்காதவராக இருந்திருந்தால் கிணற்றில் விழுந்தபொழுதே உங்களை இறைவன் அழைத்திருப்பார். ஏதோ ஒரு வகையில் நீங்கள் சாதிக்கப்போகிறீர்கள் என்பது அவருக்கு தெரியும் என்பதால்தான் உங்களை உயிருடன் இருக்க வைத்திருக்கிறார். வாழ்க்கை அவ்வளவு அழகானது, வாழுங்கள். உங்கள் பயணத்தில் எல்லாம் இனி இனிமையான பூக்களாகவே அமைய வாழ்த்துக்கள். தங்கள் சகோதரிக்கு என் அன்பார்ந்த வணக்கம். தங்களுக்கு எல்லாமுமாக இருக்கும் தங்கள் அண்ணனிற்கு எனது வாழ்த்துக்கள். உங்களுக்கு வாழ்த்துச்சொல்லி தைரியம் தரும் அனைத்து இதயங்களோடு நானும் கைகோர்க்கிறேன் கைகொடுக்க.

மிக்க அன்புடன்,
சேரன்
திரைப்பட இயக்குனர்

அரசன் said...

சேரன் அவர்களுக்கு நன்றிகள் பல உங்கள் வார்த்தைகள் அந்தோனிக்கு மேலும் பலத்தை கொடுக்கும்
அன்புடன் மகி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இப்ப தான் அந்தோணியிடம் தொலைபேசினேன்! என்ன ஒரு இனிமை! என்ன ஒரு உற்சாகம்! எனக்கு மிகவும் மகிழ்ச்சி!

வைகறையில் வைகைக் கரையில் - பாட்டைப் பாடிக் காட்டினாரு! வாவ்!
சுப பந்து வராளி-ன்னு ராகத்தின் பெயரையும் சொல்லி அசத்தினாரு! இசை இன்பம் குழு வலைப்பூவில் அந்தோணியையும் சேத்துக்கிடலாமா-ன்னு எனக்கு ஒரு பேராசை! :-)

பாட்டைக் கொண்டு ராஜ-பாட்டையில் அந்தோணி உலா வர வேண்டும்! அதற்கான உந்துதல் ஊக்கம் ரெண்டும் அவர்கிட்ட இன்னும் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு!

வாழ்த்துக்கள் நண்பா!
சேரன் செதுக்கிய பின்னூட்டத்தில் வாழ்வு குறித்த ஒவ்வொரு சொல்லும், வரிக்கு வரி வழிமொழிகிறேன்!
உன் இசை ஆர்வமே உன்னை "இசை" பட வாழவைக்க என் வாழ்த்துக்களும், வேண்டுதல்களும்!

மற்றவை தனி மடலில்!

Anonymous said...

தன்னம்பிக்கையின் எழுச்சியாய் காட்சி தந்து.. தொல்லுலகில் உங்களைப் போன்று உடலால் மட்டும் ஊனமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இதயங்களுக்கு வாழ்வில் வழிகாட்ட வேண்டிய நீங்கள்.. சோகமாகவும், அழுது கொண்டும், துயரத்தை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை தயவு செய்து தவிர்க்க வேண்டும்.

அன்புடன்

செந்தாமரை

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.
There was an error in this gadget

LinkWithin

Related Posts with Thumbnails