GIVE & RECEIVE FULL

Custom Search

Wednesday, May 7, 2008

எனது முதல் சம்பளம்.


ஏப்ரல் 30 அன்று எனது முதல் சம்பளம் ரூ. 3000-த்திற்கான செக் வந்தது.

அதற்கு 2 நாள் முன்னதாகவே பார்ப்பவர்களிடமெல்லாம்.... போன் செய்பவர்களிடமெல்லாம்.... எனக்கு சம்பளம் வரப் போகிறது என்று பினாத்த ஆரம்பித்து விட்டேன்.

செக் பார்த்தவுடன் கண்களில் அருவி வழியத் தொடங்கி விட்டது.

அட...!

நான் கூட வேலை செய்கிறேன்....!

நான் கூட சம்பளம் வாங்கி விட்டேன்....!

இந்த நினைப்பே...
கோடி யானைகளின் பலத்தைத் தந்தது.

சென்ற வருடம் இதே நாளில் அப்பாவிடம்....
"அப்பா... நான் அடுத்த மாசத்துலருந்து சம்பளம் வாங்க ஆரம்பிசிடுவம்ப்பா. அதுக்கப்புறம் உங்களுக்கு மாசா மாசம் 1000 ரூவா கண்டிப்பா தருவேன்...!"
என்று உறுதியளித்தது நினைவுக்கு வந்தது.

2007 ஜூன் 27 அன்று அப்பா எங்களை விட்டுப் போகும் நாள் வரையிலும், எல்லாரிடமும்...

"அடுத்த மாசத்திலருந்து என் சின்ன மவன் சம்பளம் வாங்குவான்... எனக்கு மாசத்துக்கு ஆயிர ரூவா குடுக்கறன்னு சொல்லியிருக்கறான்" என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதை எழுதும் இந்த வினாடியிலும் கண்ணீர் மறைக்கிறது.

அவருடைய அடுத்த மாத நம்பிக்கை.... ஒரு வருடம் கழித்துத்தான் நிறைவேறியிருக்கிறது.

இந்த நிமிடம் வரையிலும் நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கையும் என் தந்தையின் உழைப்பு.

அண்ணனுக்கப்புறம் 6 பெண்களுக்குப் பிறகு... 8-வதாய் என்னைத் தவமிருந்து பெற்று சீராட்டி வளர்த்தவர்.

என் இசைத்திறன், அறிவுத்திறன்.... அனைத்துமே அவரது மரபணு தந்த வரம்.

(வீரமாமுனிவரின் 'தேம்பாவணியை' அவர் சுயமாக மெட்டுக்கட்டி வைத்திருந்தார்.)

அவரது கம்பீரக் குரலில் எந்தப் பாடலுமே கேட்கக் கேட்க இனிமை.

அவர் தன் மக்களுக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் ஒரு இலக்கியம் போன்றது.

அவரிடமிருந்து நான் பெற்றவை எண்ணிலடங்கா....

நான் பெற்றதில் கொஞ்சமேனும் திருப்பித் தர ஆயிரம் கனவு கண்டிருந்தேன்.

என் மனக் காடெங்கும்...
முட்டி...
மோதி...
அலைந்துத்...
திரிந்துக்....
கதறுகிறேன்.

அப்பா....! உங்க சின்ன மவன் சம்பளம் வாங்கியுட்டம்ப்பா.

உங்களுக்குச் சேர வேண்டிய 1000 ரூவாய யார்ட்டப்பா குடுப்பன்.?

ஏம்பா என்ன விட்டுட்டுப் போனீங்க?

கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது.


(இப்படி ஒரு பதிவை நான் எழுதுமளவுக்கு என்னை உயர்த்திய, "மதுரா ட்ராவெல்ஸின்" அதிபர் என் வணக்கத்திற்குரிய, கலைமாமணி திரு. வி. கே. டி. பாலன் ஐயா அவர்களுக்கு என் கண்ணீர் கலந்த நன்றிகள்.)


[Valid Atom 1.0]

13 comments:

Aruna said...

//கண்ணீரினூடே நேரெதிர் ஷெல்ஃபில் புகைப்படத்திற்குள்ளிருந்து அப்பாவின் உருவம் ஏதோ பதில் சொல்வதாய்ப் படுகிறது//

என் மகன் சம்பளம் வாங்கிட்டான் பார்த்தீங்களா? அவன் இன்னும் மேலே மேலே உழைத்து உயர்ந்து எல்லோருக்க்கும் ஒரு கிரியா ஊக்கியா இருப்பான் பாருங்கன்னு சொல்வதாய் படுகிறது எனக்கு....
அன்புடன் அருணா

Tech Shankar said...

Well done. Dear Dude.

கண்ணீரைக் காதலித்தவனுக்கு கடலின் உப்பு எம்மாத்திரம்?
உங்களின் சோகங்களெல்லாம் இனிமேல் சுகமாகட்டும்.
உங்களின் வெற்றி குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உண்மைத்தமிழன் said...

முத்து

உன் மனத்துயரை கடவுள் நிச்சயம் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன். சில வேளைகளில் நினைப்பது ஒன்று.. நடப்பது ஒன்றாக இருந்தாலும், எது நடந்திருந்தாலும், அதற்கொரு அர்த்தம் இருக்கும். இது போகப் போக உனக்கே புரியும்.. அப்பாவின் ஆசிர்வாதம் நிச்சயம் உனக்கிருக்கிறது.. மேலுலகத்தில் இருப்பினும் அங்கிருந்து பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.. கவலை வேண்டாம்..

வாழ்க வளமுடன்

GeneralZunaid said...

I was totally upset on reading your this post. And also I like the poem by Kannian pukunranaar, really a situation poem.
But Anthony, surely God will show mercy upon you and your dreams will come true one day.

M.Rishan Shareef said...

மிகவும் நெகிழவைத்த பதிவு இது அந்தோணி முத்து.
வருந்தவேண்டாம் நண்பரே!

Unknown said...

வாழ்த்துக்கள் அந்தோணி.. உங்களது தன்னம்பிக்கைக்கும்,விடாமுயற்சிக்கும் கிடைத்தவெற்றி....!

உங்களது வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த நல் உள்ளங்களான திரு.மதுரா பாலன், மற்றும் சுரேஷ் அவர்களுக்கு உங்கள் மற்றும் எனது சார்பில் நன்றிகள்...

சென்னைவரும் போது கட்டாயம் உங்களை சந்திக்க முயல்கின்றேன்...

N Suresh said...

அன்புத் தம்பி

இந்தப் பதிவை இப்போது தான் வாசித்தேன். அப்பா அப்பா தான்! நான் அழுதுவிட்டேன். அப்பா விண்ணகத்திலிருந்து உனது சந்தோஷம் கண்டு மகிழ்வார். நீ அவருக்கு செய்யும் நன்றிக் கடன் என்பது எப்போதும் நீ சந்தோஷமாக இருப்பது தான்.

என் சுரேஷ்

cheena (சீனா) said...

அந்தோணி முத்து

முதல் சம்பளம் - அப்பாவின் நினைவு - நெகிழ வைக்கும் பதிவு
என்ன சொல்வதென்றே தெரியவில்லை


கை ஊண்றத் தொடங்கி விட்டாய் = இனி கவலை எதுவும் இல்லை. உன்னுடைய நோக்கங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேறத் தொடங்கும். எண்ணங்கள் செய்லகளாகும் காலம் அதிக தூரமில்லை

நல்வாழ்த்துகள்

Anonymous said...

இனி எல்லாம் சுகமே.... மென் மேலும் வெற்றி சிறக்க மணமார்ந்த வாழ்த்துக்கள்.

Anonymous said...

எனது முதல் சம்பளம் --. நிறைய பேர் வாழ்க்கையிலும் இது மாதிரிதான் நடக்கிறது.பெற்றோர்கள் பிள்ளைகளின் வளர்ச்சியை பார்க்க முடியாமல் போய் விடுகிறார்கள்.

ஆனால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு என்றும் இருக்கும்

Anonymous said...

Varthigal ellai anna,

nanum ungalai pola oru vana nala nilamiku vara muyachigal siethu kondu erukiren,

epodiko etho oru moolil ungalkuvum godvulai thianithukondu erukum oru sagathodarn.

Anonymous said...

top [url=http://www.001casino.com/]casino[/url] hinder the latest [url=http://www.realcazinoz.com/]realcazinoz.com[/url] manumitted no consign reward at the chief [url=http://www.baywatchcasino.com/]casino online
[/url].

Anonymous said...

[url=http://www.23planet.com]casino[/url], also known as uncommon casinos or Internet casinos, are online versions of acknowledged ("hunk and mortar") casinos. Online casinos prescribe gamblers to extemporize and wager on casino games to a t the Internet.
Online casinos habitually rib uncivil odds and payback percentages that are comparable to land-based casinos. Some online casinos let go by higher payback percentages with a point of viewpoint management automobile games, and some promulgate payout compartment audits on their websites. Assuming that the online casino is using an correctly programmed unsystematic league generator, narrate games like blackjack query of at near rationality of an established heritage edge. The payout slice tipsy the aegis regardless of these games are established at closest the rules of the game.
Varying online casinos submit minus or procurement their software from companies like Microgaming, Realtime Gaming, Playtech, Pestilence Temerarious Technology and CryptoLogic Inc.

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails