|
என் அன்புக் கர்ணர்களே....
உங்களைப் பற்றி நான் எழுதிய...
"என் இனிய கர்ணா.." கவிதை... இன்று www.worldtamilnews.com "தமிழ்க் குரல்" இணைய வானொலியில் ஒலிபரப்பப் படுகிறது.
என் வாழ்வின் இன்னொரு கர்ணர் மதுரா ட்ராவெல்ஸ் அதிபர், 'திரு. வி. கே.டி. பாலன் ஐயா' அவர்களின் சிம்மக்குரலில்... அதைக் கேட்கும்போது...
மறைந்த என் தந்தையே...
என் எழுத்தை அங்கீகரித்துப் பாராட்டி...
அவரது சொந்தக் குரலில் வாசிப்பதைப் போல உணர்கிறேன்.
(மேற்கொண்டு எழுத கண்ணீர் மறைக்கிறது.)
பொதுவாக என் எழுத்துக்களைக் குறித்த தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டு.
அது இன்றைக்கு முழுவதுமாக நீங்கி விட்டது.
என் இனிய கர்ணா... கவிதையைக் கேட்க இங்கே க்ளிக் செய்து wwww.worldtamilnews.com சென்று... அங்கே "KAVITHAI KELUNGAL" சுட்டி(LINK)யை சொடுக்குங்கள்....
கவிதை கேட்டுவிட்டு....
அங்கேயே Feedback பட்டனை...
Click செய்து...
ஒரு வரி..,
ஒரே ஒரு வரி...
(அ) வார்த்தை பதிவு செய்யுங்கள்.
2 comments:
//பொதுவாக என் எழுத்துக்களைக் குறித்த தாழ்வு மனப்பான்மை எனக்கு உண்டு.
அது இன்றைக்கு முழுவதுமாக நீங்கி விட்டது//
உன் எழுத்தைப் பற்றித் தாழ்வு மனப்பான்மையா? விட்டுத் தள்ளு.....நம் எழுத்து நம்மைத் தூக்கி நிறுத்தும் தூண்களாக வேண்டும்.....இன்று உன் எழுத்து உன்னைத் தூக்கி நிறுத்தவில்லையா? உன் எழுத்துக்கள் உணர்வுபூர்வமானவை...உணர்ந்து கொள்...
அன்புடன் அருணா
இது கவிதை அல்ல; காவியம்
வாழ்த்துகள்
அன்புடன் என் சுரேஷ்
Post a Comment