
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு மணித்துளியும்...
மரணப்படுக்கையிலும்
மறக்காது காதலியே...!
கனவோடு சில நேரம்- என்
நினைவோடு சில நேரம்...
உறக்கத்தில் சில நேரம்...
உன் நினைவு தந்தக்
கிறக்கத்தில் சில நேரம்...
இப்படியாக மாறி மாறி...
உன்னை...
என் உயிர் முழுதும்...
நிறைத்திருந்தேன்...!
இல்லை... இல்லை...
என் உயிரே நீதானென...
உன்னை மட்டுமே நினைத்திருந்தேன்.!
கண்ணெதிரே வருவாயோ...?
இல்லை...
காணாமல் போவாயோ....?
எனக்கு..
கண்ணீரைத் தருவாயோ....?
காதலினால்...
கத்திக் குத்துப்பட்டு...
காடு மேடெங்கும்
அலைந்து திரிந்து....
கதறியழுகின்ற...
என் ஆன்மாவின் ஓலக்குரல்...
உன் காதுகளில்...
விழவில்லையோ...!
உன்னை நினைத்திருந்த
ஒவ்வொரு மணித்துளியும்...
மரணப்படுக்கையிலும்
மறக்காது காதலியே...!
பின் குறிப்பு: என் காதலியைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு... Click here
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](valid-atom.png)
6 comments:
அங்கிள் உங்களைப் பற்றி ஆனந்த விகடனில் அறிந்து கொண்டேன். உங்கள் வலைத்தளத்தை பார்த்ததும் எனக்கும் தமிழில் வளைத்தளம் செய்யத் தோன்றியதால் முயற்சி எடுத்திருக்கின்றேன். உங்களுக்கு கவிதை கூட வருமா? இந்த கவிதை ரொம்ப நல்லாயிருக்கு. அங்கிள் ஒரு உதவி தமிழில் எத்தனை திரட்டிகள் இருக்கின்றன. அதில் சேர்வது எப்படி என்று சொல்ல முடியுமா?
That's a nice poem..You are becoming an allrounder..
anbudan aruna
சின்னண்ணன் உன் காவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.
ஆனால் கவிதைக்கும் சரஸ்வதி படத்திர்கும்
ஒத்து போகவில்லையே - ஏன்
காரணம் ஏதும் இருக்கிறதா
தெரியப்படுத்தவும்
திரு.அந்தோணிமுத்து அவர்களுக்கு,
வணக்கம், உங்கள் பதில் கடிதம் கிடைத்தது. நன்றி.
வாழ்வின் துயர எல்லையில் நின்று நீங்கள் செய்திருக்கும், செய்து வரும் சாதனைகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னுடைய உணர்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
தன்னம்பிக்கை மட்டுமே எல்லாவற்றையும் சாதிக்கவல்லது. இவ்வளவு தூரம் நீங்கள் மேலோங்கி வந்திருப்பதற்கும் உங்கள் தன்னம்பிக்கைதான் காரணம். எனவே, நீங்கள் கண்ணீர் விடவோ, நெகிழவோ, உணர்ச்சிவசப்படவோ தேவையில்லை என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து.
மனிதமும், உயிர்த்துவமும் எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் கூட எங்கெங்காவது நின்று துலங்கிக் கொண்டுதானிருக்கிறது என்பதை நானும் உணர்ந்து கொண்டுள்ளேன். இதுவே, நமது வாழ்வில் வெளிப்பட்டு உரமேற்றிக் கொண்டிருக்கிறது.
உலகின் கடைக்கோடி ஜீவனும், நிலவில் கால் பதிக்கும் கனாவை சாத்தியமாக்க வேண்டுமென்பது எனதாசை. அது, உங்களுக்கும் இருக்க வேண்டும். இருக்கட்டும்.
மேலும், உங்கள் கோரிக்கை ஒன்றையும் கடிதத்தில் வைத்திருந்தீர்கள். சினிமாவில் பாட நீங்கள் வாய்ப்பு கேட்டிருந்து கண்டு, மகிழ்ச்சி. சினிமா எல்லோருக்குமானது. பொதுவிலிருக்கிறது. நான் தற்போது வேறு சில முக்கிய அலுவல்களை மேற்கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் தங்களை நேரில் சந்திப்பேன். அப்போது, இதுகுறித்து விளக்கமாக, விரிவாக, தெளிவான புரிதலோடு நாம் பேசுவோம்.
நன்றி,
அன்புடன்
சேரன்
ennaththa solla,Sonna athu ungalukku kuraivaga irukkum,Surukkamaga sonna Konuddiga ponga
I enjoyedd reading this
Post a Comment