GIVE & RECEIVE FULL

Custom Search

Thursday, March 13, 2008

21) அந்தோணி முத்துவின் காதலி...!




சமீபமாய் அவள் நினைவு என்னை அதிகமாய் வாட்டியெடுக்கிறது.

அவளை மறக்க முடியும்,மறந்து விட்டேன் என்றுதான் இதுவரை நம்பியிருந்தேன்.

ஏனென்றால் அவளைக் காதலித்த வரை நான் சுகப்படவில்லை.

என் காதல் தோல்விக்குப் பிறகு...
வாழ்க்கையே இருளாகிப் போனது போல் உணர்ந்தேன்.

எதிர்காலம் எனக்கு Power Off செய்யப்பட்ட Monitor திரை போல, Blank ஆகிப் போனது.

சிங்கம், புலிக்காட்டில், தன்னந்தனியே, அகப்பட்டுக்கொண்ட சிறு குழந்தை போல, தவித்துப் போனேன்.

அவளைக் காதலித்த வரை, திரைப் பட இசையமைப்பாளனாவது என் இலட்சியமாயிருந்தது.

அயராத முயற்சிகளில் தொடர் தோல்விகள்.

என் இயலாமையை ஈடுகட்ட, சோறு போட்ட நிலங்களை விற்று, துணிச்சலாய் செய்த செலவெல்லாம் வீண் என்பதை, என்னாலும் என் உறவுகளாலும் ஜீரணிக்க முடியவில்லை.

பாம்புப் பிடுங்கலான வார்தைகளைத் தாங்க முடியாமல், ஒரு சமயத்தில்...,
என் கோபத்தை யார்மீது காட்டுவதென்று குழப்பத்தில், விரக்தியின் உச்சபட்ச வெறுப்பில்...

ஆம்..! பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொல்லும் ஈவிரக்கமற்றத் தாய்போல,
என் இசைத்துறைக் க்ண்டுபிடிப்புக்களை நானே...,
இந்தக் கைகளினால் உடைத்தெறிந்த கொலைகார பாவியானேன். (உடைத்தெறியப்பட்ட துண்டுகள், இப்போதும் மனக்கண்ணில் இரத்தம் வழியத் துடிப்பதாய் உணர்கிறேன்)

அதே ஆத்திரத்துடன்.... அவளுடன் 10 வருடங்களுக்கு மேலாய் உறவாடத் துணையாயிருந்த, என் Yamaha PSR-195 கீபோர்டைத் தூக்கினேன் உடைதெறிய.

ஏனோ அழுகை அழுகையாய் வந்தது.

மெல்லத் தடவிக் கொடுத்து...
அந்தக் கறுப்பு வெள்ளைக் கட்டைகளின் மீது முகத்தை இப்படியும் அப்படியும் ஈஷியபடி சற்று நேரம் அழுதேன்.

மெதுவாக நகர்த்தி அப்புறம் வைத்தவன்தான்.

அதற்கப்புறம்....
பாடுவது கூட மறந்து போனது.

எப்போதாவது... இன்னும் அவள் மீது ஆசை இருக்கிறதாவென பரிசோதித்துப் பார்க்க வேண்டி, கீபோர்டைத் தொட்டு வாசித்துப் பார்ப்பேன்.

மீண்டும் சிறிது நேரம் அவளுக்குள் முழுமையாய் மூழ்கிப் போய்,
ஆனாலும் அவள் மீது விருப்பமில்லாதவனைப்போல...
என்னையே ஏமாற்றிக் கொள்வேன்.

ஒரு கட்டத்தில் இப்படி ஏமாற்றிக் கொள்வதும் பிடிக்காமல்...
இசை நாட்டமுள்ள ஒரு நண்பனிடம்.....
கீபோர்டைக் கொடுத்தனுப்பி விட்டேன்.

வருடங்கள் உருண்டோடிவிட்டது.

மனக்காயங்களும் ஆறத் துவங்கியுள்ளது.

கம்ப்யூட்டர் கிடைத்து...
அதன் மூலம் சுய சம்பாத்தியத்திற்கான.....
வெளிச்ச்க் கீற்று தோற்றம் காட்டத் துவங்கியுள்ளது.

இணையம் மூலம் என் எழுத்தாளக் கனவும் நனவாகியுள்ளது.

திடீரென்று...
வாழ்க்கை...
Laptop-ன் LCD ஸ்க்ரீனில் தெரியும் வண்ண வண்ண...
இயற்கை காட்சிகளுடன் மிக அழகாகத் தோன்றுகிறது.

அழகிய வாசங்களை... மனம் நுகர ஆரம்பித்துள்ளது.

நினைத்துப் பார்க்க முடியாத பல கனவுகள், இயல்பாய் நனவாகத் துவங்கியுள்ளன.

இறை நம்பிக்கையுடனான, சுய நம்பிக்கையும்..., அதன் முயற்சிகளின் விளைவுகளும்...
முழு வீச்சில், வினை புரியத் துவங்கியுள்ளன.

இப்போது பார்த்து அவள் மீதான என் காதல் மறு ஜென்மமெடுத்தாற்ப்போல் , வெகுவாய் என்னை வதைக்கிறது.

எனக்குப் பிடித்தப் பாடல்களை மீண்டும் கேட்க்த் துவங்கியுள்ளேன்.

அட...! சமயத்தில் பாடக் கூட செய்கிறேன்.

கனவுகளில் கூட அவள் வந்து... என்னை வியர்த்து விறுவிறுத்து எழச்செய்கிறாள்.

மீண்டும் கீபோர்டில் விளையாடி, சுயநலமற்று...
அவளுடன் கலந்து கரைந்து போக மாட்டேனாவென்று.... மனமும் விரல்களும்... ஏங்கியழுகின்றன.

அவளை உண்மையாய்க் காதலிப்பவர்களைத் துன்பத்திலாழ்த்தி, பிறகு மெல்ல அணைத்து ஆறுதலளிப்பதுதான் அவளுக்கு கைவந்த கலையாயிற்றே?

நண்பனிடம் கொடுத்த கீபோர்டை அவனே திருப்பித் தந்தாலும்...,
கொடுத்த பொருளைத் திரும்பப் பெறுவது மகாபாவம் என்பதில் உறுதியாயிருக்கிறேன்.

உண்பதைக் குறைத்துக் கொண்டேனும்... சேமித்து PITCH BENDER வசதியுடன் கூடிய ஒரு புதிய கீபோர்ட் வாங்கத் துடிக்கிறேன்.

அப்படிப் பார்த்தாலும்... அதற்குப் பணம் சேர்க்கப் பல காலமாகும், என்கிற உண்மை உறைத்து விரக்திச் சிரிப்பு மிஞ்சுகிறது.

நிறைய சம்பாதிக்க வேண்டும்.

என் காதலியுடன் இணைய வேண்டும்.

ஆமாம்...?
நாங்கள் எப்போது பிரிந்தோம்....
இப்போது இணைவதற்கு...?

அவள்தான் என் குரல் நாண்களில் கூட கலந்திருக்கிறாளே.
பிறகென்ன?

எப்போதோ படித்த ஒரு பொன்மொழி நினவுக்கு வருகிறது.

உன்னிடம் உள்ள அனைத்துமே தொலைந்து போய் விட்டாலும்...
நாளை என்ற ஒன்று நிச்சயமாய் இருக்கிறது.
அதில்...
எத்தகைய அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்...!


16 comments:

Aruna said...

May be you had lost your keyboard but the talents within you are still there struggling to come out of you.Keep up that spirit and that will take you back to your love life!!!
anbudan aruna

நாஞ்சில் பிரதாப் said...

Ur Blog published in Anandavigadan's VARAVERPARAI. Congrats...

thanks and regards

Pratap

கண்மணி/kanmani said...

அந்தோணி முத்து உங்கள் பற்றிய செய்தி ஆ.விகடனில் படித்தேன்.நீங்கள் ஏன் தமிழ்மணம் ,தேன் கூடு போன்ற வலை திரட்டிகளில் இணையவில்லை.
தமிழ் மணத்தில் இணைந்தால் உங்கள் உலகம் மேலும் விரிவடையும்.எழுத்துக்கள் வாசிக்கப் படும்.நண்பர்கள் வட்டம் பெருகும்.உதவிகளும் கிடைக்கக் கூடும்.
www.thamizmanam.com என்ற தளத்தை கிளிக்கி யாரிடமும் உதவி கோரலாம்.
உங்களைப் பற்றிய செய்தியொன்றை இன்னும் சில மணி நேரத்தில் பதிவிடப் போகிறேன்.ஆட்சேபணையில்லையே.
சகோதரியின் வழ்த்துக்கள்

Mukundaraj said...

Anthony,

Read your interview in Vikatan. I salute you and your sister.

Mukund

வந்தியத்தேவன் said...

சகோதரா உங்களைப் பற்றிய கட்டுரையை ஆனந்தவிகடனில் வாசித்தேன் உங்கள் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

விகடனில் உங்களைப் பற்றி படித்தேன்.. உங்கள் தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது.
கண்மணி அவர்கள் சொன்னதுபோல நீங்கள் தமிழ்மணத்தில் இணைந்துகொண்டால் பல
நல் இதயங்கள் உங்களுக்கு உதவக்கூடும்..

அன்புடன்
வசி

Anonymous said...

Your interest, confidence, and positive attitude are greately appreciated. Keep it up. You
will succeed. My wishes - Ravi

Anonymous said...

நண்பரே, உங்களைப்பற்றி ஆனந்த விகடனில் படித்து அறிந்து கொண்டேன். உங்கள் கனவுகள் மெய்ப்படவும், நீங்கள் பெரும் சாதனைகள் பல புரிந்து எங்களுக்கெல்லாம் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உண்மைத்தமிழன் said...

அந்தோணி முத்து, நேற்றுதான் தங்களைப் பற்றி ஆனந்தவிகடனில் படித்தேன்.

வாழ்க்கையில் சில ஏன் என்ற கேள்விக்கு இவிடையே கிடைப்பதில்லை..

தன் பக்தனாகவே இருந்தாலும் சரி படைத்தவனே எடுத்துக் கொண்டால் யாரிடம் போய்க் கேட்பது.

தங்களுடைய வாழ்க்கை மிகவும் உருக்கத்தைக் கொடுத்தது..

தைரியமாக இருங்கள்.. ஒரு வாசல் மூடினால் ஆண்டவன் நிச்சயம் மறுவாசலைத் திறந்துதான் வைப்பான்.

நிறைய எழுதுங்கள்.. படியுங்கள்.. உங்களுடைய ஊனத்தை வென்று காட்டுங்கள்.

இதுவே ஆண்டவன் உங்கள் வழியே பலருக்கும் சொல்லும் ரகசியம்..

புரிந்து கொண்டவர்களுக்கு நீங்களே வழிகாட்டி.. தெய்வம்.. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மீண்டும் அடிக்கடி சந்திப்போம்.

+Ve Anthony Muthu said...

கண்மணி said...
// உங்களைப் பற்றிய செய்தியொன்றை இன்னும் சில மணி நேரத்தில் பதிவிடப் போகிறேன்.ஆட்சேபணையில்லையே.
சகோதரியின் வழ்த்துக்கள் //

மிக்க நன்றி சகோதரி.

என் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால்...
தமிழ்மணச் சுட்டி தவறிவிட்டது.

உங்க அன்புள்ளம் கண்டு நெகிழ்ந்தேன்.
நன்றிகள்.

+Ve Anthony Muthu said...

நாஞ்சில் பிரதாப்
Mukund
வந்தியத்தேவன்
Anonymous
Ravikumar
Srini
உண்மைத் தமிழன....

அனைவருக்கும் அன்பான நன்றிகள்

Anonymous said...

you are very much insipiring us anthony though your problems. you given boost to somamy presons life. i knew about u from vikatan, you are a amazing preson, now my problem is very small for me, thanks to you. i will pray for u to your wishes become ture, definetly comes true. we are there for u you to support always

Ramah, NH

N Suresh said...

அன்புள்ள அந்தோணி

'என்னை பிடிக்கவில்லை - உங்கள்
படிப்பைத் தான் பிடிக்கும் என்ற
ஒற்றைக் காரணத்தால் நீங்கள் என்னை
காதலிக்கவில்லை. ஆனால் உங்களை
இன்னமும் நினைத்துக் கொண்டே இருக்க என்னில் ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன என்று எனை காதலித்த ஒரு நண்பி ஒருமுறை என்னிடம் சொன்னார்கள்"

இந்த பதிவை காணும்போது அது தான் எனது ஞாபகத்திற்கு வருகிறது.

காதலிக்க ஏழைகளுக்கு என்ன தகுதியுண்டு என்ற வறுமையில் வாடின கண்ணீரோடு அன்றைய எனது நிலைபாடு பற்றி என்னை காதலித்த நண்பியிடம் சொன்னேன்.

ஏழ்மையில் என்னை படிக்கவைத்து எனது நிழலில் ஆறுதல் பெற காத்திருந்த பெற்றோருக்கு விரோதமான அல்லது ஈடுபாடில்லாத ஒரு செயலை செய்ய எனக்கு மனமில்லாத அன்றைய வாலிப நாட்களின் நிலைபாட்டை
அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

ஆனால் பாவமுந்தன் இசைக்கருவி!

அது எப்படித்தான் உனது கருத்துக்களை அறிந்து, உணர்ந்து அதன் புரிதலையோ உன்மீதுள்ள கருத்து வேறுபாடுகளையோ சொல்ல முடியும்?

கவலைப்படாத உனது காதலி உன்னோடு விரைவில் சேர்வாள்!

எங்கோ உனக்குள் ஒளிந்திருந்த சந்தோஷம், எழுத்து, தைரியம், தொலைநோக்குப் பார்வை என பல இப்போது வெளி வந்துள்ளனவே!

கணினி, நாற்காலி, புதிய நண்பர்கள் என உனைத்தேடி இனி எத்தனை எத்தனை வர இருக்கிறது!

உனக்கு காதலியும் தான் வருவாள்! வந்தே ஆகவேண்டும்! இல்லையென்றால்
வரவைப்போம்:-)

காதலியோடு நீ சேர்ந்து
பலநூறு ராகங்கள் சுருதி லயத்தோடு
கலந்து மகிழ என் இனிய பிரார்த்தனைகள்!
வாழ்த்துகள்

பாசமுடன்
என் சுரேஷ்

Unknown said...

hi
muthu i read about you in anandha vikadan.and visit your blog too. its really nice and amazing. i thought my life is just going with out any happiness. after i saw your blog i felt like shame of myself its really inspired and change my thought.
thank you.. all the best for your dream come true..
from
ML.K

Sevu said...

I have seen ur article in anantha vikatan....u r very much inspirable.

u bagged my role model position

Anonymous said...

தங்கள் அறிமுகமே ஓர் அதியற்புதப் பரிசென்று எண்ணுகின்றென். வெகுவிரைவில் pitch bender-வசதியுடன்கூடிய அந்த நீவிர் விரும்பும் keyboard தங்களுக்குச் சொந்தமாகவும், திரைத்துறையில் தங்கள் திறமை பளிச்சிடவும் இறையருளை வேண்டுகின்றேன்.
-சங்கரநாராயணன் இராமசாமி, 01,நவம்பர்,2009.

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails