
உனக்கென்ன...?
சுலபமாக உள் நுழைந்துவிட்டாய்?
நானல்லவா....
எரிமலையாகக்
குமுறிக்கொண்டிருக்கிறேன்.
ஒருவேளை....
உனக்கு,
இதெல்லாம் மிகச்சாதாரணமாய்...
இருக்கலாம்.
சிறுபிள்ளைத்தனமாய்த்
தோன்றலாம்.
புரியாமலும் போகலாம்.
மீண்டும் எனக்கு என்னவோ செய்கிறது.
நான் ஒரு பெரும் மூடன்...
முட்டாள் என்பதும் புரிகிறது.
ஏனடி வந்தாய்?
இப்படித் துன்புறுத்துகிறாய்?
கண்ணீரைத் துடைக்கிறேன் என்று வந்துவிட்டு...
இப்படி....
அதிகமாக்கி விட்டாயே.
போ.. போ...
நலமாயிரு.
இது எனது விதிப்பயன்.
தீர்க்க முடியாததென்பது எதுவுமில்லைதான்.
நான் என் வழியில் முயற்சி செய்து பார்க்கிறேன்.
ஆமாம்.....
சில் விஷயங்களை...
வெளிப்படையாக...
சொல்லவே முடியாது.
வலிகளிலேயே....
மிகக் கொடூரமானது...
மனம் சம்பந்தப் பட்டதுதான்.
நீ தோற்றுப் போய்...,
வெற்றியடைந்துவிட்டாய்.
நான்................
ஆகட்டும்.... ஆகட்டும்....!
3 comments:
ஆமாம்,
சில் விஷயங்களை
வெளிப்படையாக
சொல்லவே
முடியாது.
சொல்லவும்
கூடாது..
ஆனால்
ஆரம்பித்த
அழுகை
இன்னமும்
ஓயவில்லை...
காரணங்களைத்
தேடிப்பார்த்தால்
நாம்
முட்டாளாகி
பூஜ்ஜியமாகி
போயிருப்போம்...
உனக்குப் புரிகிறது தோழி..!
அவளுக்கு...!
இந்த மனம் ஒரு தெரு நாய் போல...
எத்தனை முறைதான் அடித்து விரட்டினாலும்...
சரி...!
அன்பாய் அழைத்துவிட்டால் போதும்...
மீளவும் வாலைக் குழைத்துக் கொண்டு.,.
ஓடிப் போய் நிற்கும்.
மனம் மரித்தால்
மட்டுமே...
தப்பித்தல் சாத்தியம்.
உடல் மரித்தால் மட்டுமே மனம் மரித்தல்
சாத்தியம்...
(ஞானிகள் விதிவிலக்கு)
நமக்கு புரிவது மற்றவருக்கும் புரிய வேண்டும் என்பது அறியாமையா? அல்லது எதிர்பார்ப்பா? புரிதல் தன் இயல்பிலிருந்து வர வேண்டும். இயல்பில் இல்லாதது சுயநலமே! அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் குமுறிக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
Post a Comment