
மூங்கில்துறைப்பட்டில்.. (கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைப் பள்ளியில் 1979 to 1980)
நான் 2'nd Standard படித்த சமயம்.
அதுக்கு முந்தின வகுப்பிலெல்லாம்... Last Rank தான் வாங்குவேன்.
என் அண்ணன் அந்த வருடம்தான் என்னைக் நன்றாக கவனிக்கத்
(!!!!வேறென்ன அடிதான்)
தொடங்கி, குறுகிய காலத்திலேயே... 1-st Rank எடுத்து நல்ல பேர் வாங்கியிருந்த நேரம்.
ஒரு நாள் கிரிஜா மிஸ். G.K கிளாஸ்.
எல்லா பாடமும் நான் முன்னாடியே படிச்சு முடிச்சுடறதால, ஆர்வமே இல்லாமல் சும்மா உட்காந்திருக்கையில்... என் பென்சில் டெஸ்க்கிற்கு கீழே விழுந்துடுச்சு.
யாரும் என்னை பார்க்கலைன்னு உறுதிப்படுத்திக் கொண்டு...
மெல்லக் கீழே இறங்கி மூழ்கியபடி தேடுகிறேன்.
சட். அது எங்கே போய் தொலைஞ்சுது???
திடீர்னு மிஸ் ஒரு கேள்வி கேக்கறாங்க.
What are the colurs of our National Flag.?
யாருமே பதில் சொல்லவில்லை.
திடீர்னு ஒரு குரல் சத்தமாய்.
Saffron, white & Green.
மிஸ் சுற்றுமுற்றும் தேடறாங்க...
யார் பதில் சொன்னாங்கன்னு.
(குரல் மட்டும் வருது... ஆளு எங்கே..?)
நான் அவசரப்பட்டு பதிலைத் துப்பிட்டனே தவிர உடனே பயம் பிடிச்சிடிச்சு.
"படவா நான் பாடம் நடத்தறேன்... நீ அங்க டெஸ்க் கீழ என்ன பண்றே'ன்னு" ஸ்கேல் விளையாடத் தொடங்கிடும்னு எதிர்பார்ப்போட எழுந்து நிக்கறேன்.
முழு கிளாஸே என்னைத்தான் கவனிக்குது.
"மிஸ்... பென்சில் விழுந்துடுச்சு... அதான்..." எச்சிலைக் கூட்டி விழுங்குகிறேன்.
மிஸ் மெதுவா பக்கத்துல வந்து...
(ஐய்யோ அடிதான்.)
என் தலையை கலைச்சுவிட்டு...
சிரிக்கறாங்க.
மேக மூட்டம் விலகி பளீர் வெளிச்சம். (அப்பா...டா)
அதுக்கப்புறம்... மிஸ் சொன்னது... கிளாஸே...
கைத்தட்டினது...
யப்பா... இப்பவும் மறக்க முடியாத நினைவுகள்.
அதுக்கப்புறம் ஒரு நாள் அண்ணன் கூபிட்டு விசாரிச்சார்...
"ஸ்கூல்ல இதுமாதிரி பண்ணினியா?"
திரும்ப பயம்.
யார் போட்டுக் குடுத்துருப்பாங்க.?
பயத்தோடு மீளவும் என் விளக்கம்.
"பென்சில் கீழே..."
என்று நான் தொடங்கவும்...
அண்ணன் அப்படியே வாரி அணைத்துக் கொண்டார்.
(இது அபூர்வம்)
பக்கத்தில் திரும்பி அண்ணியிடம்...
"இன்னைக்கு ஸ்கூல் போனா இவன் மிஸ் இவனப் பத்திதான் ஒரே பாராட்டு. செம ப்ரில்லியன்ட்ங்க, உங்க தம்பி-ன்னு.."
அதுக்கப்புறம் அண்ணன் பேசியது இப்போ நினைவில்லை.
ஆனா இப்ப நினைச்சா கண்ணீரோடு...
"தன் மகன் சான்றோன் எனக் கேட்ட தாய்"
குறள் ஞாபகம் வருது.
இந்தப் பதிவை எழுதத் தூண்டிய ஒரு சக பதிவு.. இதோ... இங்கே...
6 comments:
அட நல்லாருக்கே இது!!
//ஆனா இப்ப நினைச்சா கண்ணீரோடு...
"தன் மகன் சான்றோன் எனக் கேட்ட தாய்"
குறள் ஞாபகம் வருது.//
அண்ணா அம்மாவாயிட்டாரா??
மலரும் நினைவுகள் மாதிரி மனதை சந்தோஷப் படுத்துவது ஒன்றுமே இருக்க முடியாது!!!இது மாதிரி பதிவுகள் இனிமேலும் எதிர்பார்க்கிறேன்
அன்புடன் அருணா
Dear Anthony,
Soon something good will happen to you. Remember that you are surrounded by people with real good hearts.
I'm Trying very hard to get you something good.
Your friend
"அருணா"
நன்றி அருணா.
முயற்சிக்கிறேன்.
"Anonymous"
முகம் தெரியா நண்பரே...
//Soon something good will happen to you.//
இதை அசரீரி வாக்காக எடுத்துக் கொள்ளலாமா?
இல்லை.
தேவதையின் நற்செய்தி என்று கொள்கிறேன்!
//Remember that you are surrounded by people with real good hearts.//
மனம் நெகிழ்கிறது நண்பரே.
வந்து போனதற்கு நன்றிகள்.
அன்புள்ள அந்தோணிக்கு,
முகம் தெரியாத நண்பன் எழுதுவது. இது அசரீரியும் அல்ல, தேவதையின் நற்செய்தியும் அல்ல. தங்களின் நல்ல மனதிற்கு நல்ல மனம் கொண்ட சிலர் செய்யப்போகும் சிறு உதவி. அவ்வளவே. விவரம் இன்னும் சில நாட்களில்.
முகம் தெரியாத நண்பன்.
// அந்த நாள் ஞாபகம்.... //
interesting narration.
//முகம் தெரியாத நண்பன் எழுதுவது. ... ... ... ... விவரம் இன்னும் சில நாட்களில்//
mighty glad to read this
Post a Comment