
உறக்கமில்லை..
என் உணர்வுகளை...
உதாசீனப்படுத்திய...
உன் அலட்சியம்...
எனது இதயத்தை...
இன்னமும்...
கிழித்துக்கொண்டிருக்கிறது.
என்னதான் சகஜமாயிருப்பதாய்...
நான் காட்டிக் கொண்டாலும்...
சட்டென்று உடைந்து விடுகின்றேன்.
ஆயினும்....
இனிமேலும்...
இறங்கிவந்து...
நான்...
இழிவுபடத் தயாரில்லை.
போதும்...
நான் பட்டது.
இதயமென்று ஒன்று...
இருப்பதாய்க் கொண்டால்தானே...
இந்த வலியும் வேதனையும்.
இவனுக்கெல்லாம்...
இதயம் ஒரு கேடா...?
No comments:
Post a Comment