
உன் மீதான...
என் காதலின் மேலீட்டினால்...
ஒவ்வொரு இரவும் என் படுக்கை...
கண்ணீரால் நனைகிறது.
உன்னை அடையவோ...
உணரவோ...
என்னால் இப்பிறவியில் இயலாது.
குறைந்தபட்சம்...
என் காதலைக் கூட...
உன்னிடம் பகிரங்கமாய்...
அறிவிக்க முடியாத ...
கொடும் பாவி நான்.
இரவுகளின் தனிமை...
என்னை வாட்டுகையில்...
நீ என் அருகாய் அமர்ந்து...
அன்பாய்த் தலைதடவி...
உச்சிமோந்து...
முத்தமிடுவதாயும்...
உன்னை இறுக்கியணைத்து...
மார்பிலே முகம் புதைத்து...
விடை தெரியா என் வாழ்வின்...
அத்தனைக் கேள்விகளும்...
அப்போதே முடிந்துவிடாதா...
என ஏங்கிக்...
கலங்கி...
விசும்பியழுவதாய்...
கற்பனை செய்து கொள்கிறேன்.
இதை வெறும்...
உடல் சுகத்தின் பிதற்றல்...
என்று நினைப்பாயானால்...
என்ன ஒரு மனுஷி நீ..?
இது தவறென்றோ சரியென்றோ...
நீ சொல்ல வேண்டாம்.
என் மனம்...
என் கனவு...
என் கற்பனை...
அனைத்திற்கும்...
நானே அரசனாயிருக்க...
நீயென்ன எனக்கு நாட்டாமை செய்வது.?
போ... போ...
உன் வேலையைப் பார்.
நானும் என் மனமும்...
அதன் உணர்வுகளும்...
நாசமாய்ப் போகிறோம்...!
2 comments:
//
என் மனம்...
என் கனவு...
என் கற்பனை...
அனைத்திற்கும்...
நானே அரசனாயிருக்க...
நீயென்ன எனக்கு நாட்டாமை செய்வது.?
//
good.
really good ..
really touching
Post a Comment