என் இயலாமை கூட...
உன்னளவுக்கு....
என்னைத் துன்புறுத்தியதில்லை...
என் உடலை உடைத்து...
வாழ்வின் அத்தனை...
சந்தோஷங்களையும்...
என்னிடமிருந்து...
எடுக்க முயன்று...
தோற்றுப் போன...
இறைவன்....
உன்னையும் சேர்த்துக்...
கொடுத்ததில்...
சற்றே கோபம்தான்...
அவன் மேல்..!
இருப்பினும்...
இத்தனைக்கும் பதிலாக...
மனம் முழுக்க...
எதிர்காலம் குறித்த...
இணையிலா...
நம்பிக்கையைத் தந்துவிட்டதால்...
பிழைத்துப் போகிறான்...
போ...
என விட்டு விட்டேன்....!
அந்தச் சக்தியின் தெம்பில்...
உன்னைப் பார்த்துச்
சிரிக்கிறேன்...
ஏ...
என் வறுமையே...!
உனக்கொரு வறுமை...
வராதென்றா எண்ணுகிறாய்...?
4 comments:
//எதிர்காலம் குறித்த...
இணையிலா...
நம்பிக்கையைத் தந்துவிட்டதால்...//
இதற்கு மேல் என்ன வேண்டும் வாழ்வதற்கு??இறைவன் பாவம்!! பிழைத்துப் போகட்டும்...விட்டு விடுங்கள்!
அன்புடன் அருணா
வாழ்க வளமுடன்
REMBA NALLA ERUKU.....
VAAZHHA VALAMUDAN....neenda naatkalukkup pirahu rombavum mahizhchiyai irukkiradhu.-unmayahave..ungal thannambikkai engalai poendravarhalayum thottrikkolhiradhu.neengal valamudan nalamudan vaazhavaendum.niraya yezhudhungal.aha oonam ondrumillai.mana oonamdhaan irukka koodaadhu.be positive always as your name tells
Post a Comment