
முதலில் இங்கே சொடுக்கி... இந்தச் செய்தி முழுமையும் பார்த்து விட்டு... பிறகு படியுங்கள்.
சுனாமி வந்து...
சுருட்டிக் கொண்டு போன போது கூட...
நான் இப்படி அழுததில்லை....
ஒரு பெண் பிள்ளையைப் போல...
மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறேன்.....
இந்தக் காயம் ஆற எத்தனை நாளாகுமோ?.
ஏ கடவுளே நீ நிஜமாகவே இருக்கிறாயா??
முடியவில்லை...
இதைப் பார்க்கும் கொடுமையை விட...
இறந்து விடுவது எவ்வளவோ நலம்...
பார்க்கிற எனக்கே இப்படி என்றால்...
பறிகொடுத்தவர்களுக்கு எப்படி இருக்கும்?
ஓ... மனிதப் பதர்களே...
தைரியமிருந்தால்..ஒருவருக்கொருவர்...
நேருக்கு நேர் மோதி...
அடித்துக் கொண்டு செத்துப் போங்கள்...
என் குழந்தைகளை ஏன் கொன்றீர்கள்....??
போன உயிர்களின் மதிப்பை நிறுக்கும்...
தராசு....
எவரிடம் உள்ளது...???
என் கடவுளே! என் கடவுளே... !
ஏன் என் குழந்தைகளைக் கைவிட்டீர்...?..??
பிள்ளைக்கறி சமைத்தவர்களைப்...
பெற்றவளின் கருப்பையை...
நீர்...
அப்போதே...
அடைத்திருக்கக்லாகாதா?
இறந்தது சிங்களக் குழந்தைகளாக...
இருந்திருந்தாலும்...
நான் இப்படித்தான்...
துடித்திருப்பேன்.
ஏ... சுனாமியே...!
தயவுசெய்து...
மீண்டுமொருமுறை வந்து...
வன்முறைக்குக் காரணமாயிருப்பவர்களை மட்டும்...
சுருட்டிக் கொண்டு...
போய் விடேன்.
3 comments:
இது எமக்கு புதிது அல்ல. தினம் தினம் நடக்கும் கொடுமை
சோகங்களையே எழுதுவது என்று யாரிடமாவது சவால் விட்டிருக்கிறாயா? அவ்வப்போது சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் தப்பில்லை...
அன்புடன் அருணா
நல்ல கவிதை ! அவலங்களின் அப்பட்ட வெளிச்சம்!
சமூக மாற்றத்துக்கு ஒரு சிறு பங்களிப்பை கூட செய்யா விடில் நாம் கலை படைப்பாளிகளாக இருந்து என்ன பயன் !
Ho Chi Minh
Post a Comment