
மனது மிகவும்...
பாரமாய் இருக்கிறது.
நம்பியவர்களின்...
கழுத்தறுப்பு...
நேசித்தவர்களால் முதுகில் குத்துப்படல்.
சுற்றிலும் நடக்கும்...
சின்னத்தனங்கள்.
தவறுகளைப் பெரிதுபடுத்தி...
அதற்குத் தண்டனை கொடுத்து...
சந்தோஷம் காண்பவர்களின்...
குரூரம்...
அன்பு காட்டுவதாய்...
இதுவரையில்...
நடித்தவர்களின்...
நாடகம்....
பசுக்களாய்க்
காட்டிக்கொண்டு...
உள்ளுக்குள் புலிகளாய்த்
திரிபவர்களின்...
குதறியெடுக்கும்...
கொடூரம்.
அய்யோ...
மனமும் உடலும்...
ஒருங்கே...
தீப்பிடித்து எரிவதாய்...
உணர்கிறேன்.
நரகம் என்பது இப்படித்தான் இருக்குமோ...?
எதையும் வெளிக்காட்ட முடியாமல்
தனிமையில்...
வாய்விட்டுக் அழவும்..
வழியின்றித் துடிக்கிறேன்.
போராடச் சக்தியின்றி...
சோர்ந்து...
விழுகிறேன்.
என் இயலாமையின்...
அதிகபட்ச வெளிப்பாடாய்...
துடித்து...
துவண்டுபோய்...
மௌனமாய்க்
கண்ணீர் சிந்துகிறேன்.
இந்த உலகம்...
எனக்கு வேண்டவே...
வேண்டாம்.
கடவுளே...
தயைசெய்து...
என்னை...
எடுத்துக் கொண்டுவிடேன்...!
இந்த உலகில்...
வாழ...
அசிங்கமாயிருக்கிறது...!
அவமானமயிருக்கிறது...!
ஒன்று...
என்னை...
நீ...
கொன்றுவிடு...!
இல்லை...
நான் கொல்கிறேன்!
மனம் சாகடிக்கப்
பட்டபிறகு...
உடலைக் கொல்வது...
மிகச் சாதாரணம்..!
கால்வாசி இயங்கும்
இந்த உடல்...
ஒரு முக்கால்... பிணம்...!
மனம்...
முழுப் பிணம்..!
7 comments:
நன்றாக இருக்கிறது. சிலவரிகள் உண்மையைச் சொல்கின்றன.
அய்யோ!! அய்யோ!!
தேவையா இந்த ஓப்பாரி!!
cool
// இந்த உலகில்...
வாழ...
அசிங்கமாயிருக்கிறது...!
அவமானமயிருக்கிறது...! //
எனக்கும்... தினதொரும் வஞ்சிக்க பட்ட மக்களை பற்றி படிக்கும் போதும்....பார்க்கும் போதும்...
ஒவ்வொரு முறை யாருக்கேனும் அநீதி இளைக்கபடுவது தெரியும் பொழுது, உலக ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும் பொழுதும்... ஏதேனும் புரட்சி நடந்து எல்லாம் மாரிவிடாத என்று மனம் ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகிறது.. ..
மிக சிறந்த கவிதை. நன்றி. மிக்க நன்றி
//இந்த உலகில்...
வாழ...
அசிங்கமாயிருக்கிறது...!
அவமானமயிருக்கிறது.//
எனக்கும்... தினதொரும் வஞ்சிக்க பட்ட மக்களை பற்றி படிக்கும் போதும்....பார்க்கும் போதும்...
ஒவ்வொரு முறை யாருக்கேனும் அநீதி இளைக்கபடுவது தெரியும் பொழுது, உலக ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும் பொழுதும்... ஏதேனும் புரட்சி நடந்து எல்லாம் மாரிவிடாத என்று மனம் ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகிறது..
மிக சிறந்த கவிதை. நன்றி. மிக்க நன்றி
சகோதரரே! இனிமேல் உற்சாகம் கொப்பளிக்கும் வார்த்தைகளை மட்டுமே உங்க பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்!
//அம்பிகா said...
சகோதரரே! இனிமேல் உற்சாகம் கொப்பளிக்கும் வார்த்தைகளை மட்டுமே உங்க பதிவுகளில் எதிர்பார்க்கிறேன்!//
ஆஹா...
சரி...!
"சரண்" அடைகிறேன்.
:-))
Post a Comment