
மழையில் நனனைந்தபடி...
வெடித்துக் கிளம்பும்...
என் ஓங்காரச் சிரிப்பில்...
எல்லோருக்கும்... என் சந்தோஷமும்...
சுயநம்பிக்கையும்... தெரிகிறதாம்.
ரகசியமாய் அழும்... என் கண்ணீரையும்...
கூடவே... உன் நினைவுகளையும்... வெளித்தெரியாமல்..
கரைத்துக் கொண்டு போகாதா... பாழும் மழை...?
எனும் என் ஏக்கம்... எவருக்குத் தெரியும்...!
மழையும்... முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது!
11 comments:
நல்ல கவிதை அந்தோணிமுத்து!! உங்களைப் பின் தொடர்கிறேன்!
நீங்கள் தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கவும்!!
தமிலிஷிலும் போஸ்ட் செய்யவும்!
ரொம்ப தாமதமாக இன்றுதான் உங்கள் பதிவினை பார்த்தேன். வரி வரியாக பாராட்டற அளவுக்கு நான் இன்னும் வளரலை அண்ணா. Simply Superb அண்ணா. சோகத்தோடு ஒரு சுகத்தையும்தருகிறது.
மழை எப்போதும் சந்தோஷத்தைத்தான் கொண்டு வரவேண்டும் ...கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை Antony!
தேவன் மாயம் said...
//நல்ல கவிதை அந்தோணிமுத்து!! உங்களைப் பின் தொடர்கிறேன்!//
நன்றி தேவன்மாயம். என்னையும் பின்தொடர்கிறார்களா?
அன்புக்கு நன்றி!
தேவன் மாயம் said...
//நீங்கள் தமிழ்மணத்தில் பதிவை சேர்க்கவும்!!//
அட 2007 இறுதியிலேயே சேர்த்துட்டேங்க!
Kalyani Suresh said...
//ரொம்ப தாமதமாக இன்றுதான் உங்கள் பதிவினை பார்த்தேன். வரி வரியாக பாராட்டற அளவுக்கு நான் இன்னும் வளரலை அண்ணா. Simply Superb அண்ணா. சோகத்தோடு ஒரு சுகத்தையும்தருகிறது.//
அப்படியா? மிக்க நன்றி தங்கையே!
அன்புடன் அருணா said...
//மழை எப்போதும் சந்தோஷத்தைத்தான் கொண்டு வரவேண்டும் ...கொண்டுவரும் என்பது என் நம்பிக்கை Antony!//
அது எப்பிடிங்க பிரின்ஸி மேடம்.
வெள்ளத்தால் சேதம்-னு செய்தி படிச்சதில்லையா?
மழை சோகத்தையும் கொண்டு வரும் சில சமயங்களில்...!
மழை மட்டும் முயல்வதில்லை தோழா!
மனங்களும் இங்குண்டு...
ப்ரியமுடன்
JACK and JILLU said...
//மழை மட்டும் முயல்வதில்லை தோழா!
மனங்களும் இங்குண்டு...//
அங்குமா..? :-(((
(போகட்டும் விடு தோழா!)
Post a Comment