தாய்ப் பறவை பறந்தது..!
இனி அது திரும்பி வரப்போவதில்லை..!
குஞ்சு அழுதது.
அம்மா...
பறக்க முடியாத என்னையும்...
உன்னோடு எடுத்துப் போயிருக்கக் கூடாதா?
நீயில்லாத இந்தக் கூண்டில்..
உனக்கிணையாய் என் மீது அன்பு காட்ட எவருண்டு..?
நீயும் கைவிட்டாய்.
நம்பியவர் கைவிட்டார்.
என்ன செய்வதென்று புரியவில்லை..?
எங்கு செல்வதென்று புரியவில்லை..?
4 comments:
கிட்டத்தட்ட என்னோட நிலையும் அந்த பறவையின் நிலைதான். கவிதை நல்லா இருக்கு அண்ணா.
கவிதைகள் என்று பார்க்கும் போது நீங்கள் எனக்கு அக்கா.
தவிரவும் இதைக் கவிதை என என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.
ஒவ்வொரு மனிதமும் தன் உணர்வுகளை, வலிகளை எங்கேனும் இறக்கி வைத்தாக வேண்டும்.
அது சில சமயம் எழுத்தாக, பேச்சாக, கண்ணீராக, (தார்மீக) கோபமாக, மவுனமாக, சிலருக்கு இவை எல்லாமுமாக... வெளிப்படும்.
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி அம்மா!
விரும்பியவர்களின் இழப்பு.....மிகுந்த மனவருத்தம் தரும்தான் Antony...காலம் மருந்து போடும் கலஙகாதே!
அன்புடன் அருணா said...
//விரும்பியவர்களின் இழப்பு.....மிகுந்த மனவருத்தம் தரும்தான் Antony...காலம் மருந்து போடும் கலஙகாதே!//
நன்றி அம்மா!
Post a Comment