GIVE & RECEIVE FULL

Custom Search

Saturday, February 9, 2008

9) சக்தீ... சக்தீ... என் அபயக் குரல் கேட்கிறதா..?



"விண்ணும் மண்ணும் தனியாளும் - எங்கள்
வீரை சக்தி நினதருளே - என்றன்

கண்ணும் கருத்துமெனக்கொண்டு - அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி - நான்

பண்ணும் பூசனை களெல்லாம் - வெறும்
பாலை வனத்திலிட்ட நீரோ; - உனக்

கெண்ணூஞ் சிந்தை யொன்றிலையோ? அழி
விலாத் தகிலம் அளிப்பாயே?"

"நீயே சரணமென்று கூவி - என்றன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு - அடி

தாயே! எனக்கு மிக நிதியும் - அறந்
தன்னைக் காக்கு மொருதிறனும் - அருள்

வாயே என்றுபணித் தேத்திப் - பல
வாறா நினது புகழ்பாடி- வாய்

ஓயே னாவதுண ராயோ?- நின
துண்மை தவறுவதோர் அழகோ?"

"காளீ வலியசா முண்டி - ஓங்
காரத் தலைவியென் இராணி - பல

நாளிங் கெனையலைக்க லாமோ;
- உளம்
நாடும் பொருளடைதற் கன்றோ? - நின்

தாளில் விழுந்தபயங் கேட்டேன் - அது
தாராய்- யெனிலுயிரைத் தீராய் - துன்பம்

நீளில் உயிர்தரிக்க மாட்டேன் கரு
நீலியென் இயல்பறி யாயோ
"

"தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?"

"நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்

முன்னைத் தீயவினைப் பயன்கள் யாவும்- இன்னும்
மூளா தொழிந்திடுதல் வேண்டும் - இனி

என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி

தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்....!"

(-மகாகவி பாரதியார்)

3 comments:

Aruna said...

//தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை

கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ//

எத்தனை முறை படித்தாலும் இந்த வரிகள் ஒரு புது உயிரைக் கொடுக்கும் எனக்கு!
அதுவே உன்னையும் புதியவுயி ராக்கி - உனக்கேதும்
கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்யும்..சக்தீக்கு அபயக் குரல் கேட்காமலா போய் விடும்??
அன்புடன் அருணா

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

My Dearest Friend Anthony,

My words and wishes are there with you. I will try my best to support and help you thru all the possible ways.... Thanks

When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face

When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in Life to Solve

When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People

When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard

When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard

When I Asked God for Peace
He Showed Me How to Help Others

பாக்யா... said...

வணக்கம் தல,

கொஞ்ச நாளாவே நம்ம வாழ்கைல கொஞ்சம் பிரச்சனை...வேலை இல்லை... அமெரிக்கா வந்து வேலை இல்லாம இருக்குறது நான் மட்டும் தான்னு நெனைக்கிறேன்.. என் ஆங்கில புலமையோ இல்ல, தொழில்நுட்ப புலமையோ சரி இல்லாம வேலை கிடைக்கிறது தள்ளி போய்கிட்டே இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா என் மேல எனக்கு இருந்த நம்பிக்கை போகிட்டே இருக்குது...

இந்த நேரத்துல தான் உங்க வலைபூ பார்த்தேன்... உங்கள பற்றியும் படிச்சேன், ஏற்கனவே படிச்சிருந்தாலும் திருப்பியும் பாரதி கவிதையும் படிச்சேன்... மனசுல கொஞ்சம் தெம்பு திரும்பி வந்திருக்கு... அடிச்சு வேலை வாங்குறோம்.. சரி தானா தல...

ரெம்ப நன்றி தல...
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ...

A Letter to God

Oh my dear God!

I wrote a letter to you on 8' th-Dec.2007.

I want to show this world with my greatest joy,that you had answered my letter & prayers, Done great things in my life,Changed my Entire life in these 8 months.

You had fulfilled, "All of my Essential 3 needs,"

1) Online Job (With a Salary of 3000 Rs.)

2) New Laptop.

3) Powered wheel Chair.


I thank with tears in my eyes, to all of the Human forms that which you took disguise, to participate in helping me to get my Needs.

PLEASE MAKE ME POWERFUL.

PLEASE MAKE ME USEFUL TO THE WORLD.

PLEASE MAKE ME TO GIVE EVERYONE, instead of getting.

Thank you Soooo MMMuchhh.

Your's Same Faithfully & Especially Beloved Son

Anthony Muthu.

LinkWithin

Related Posts with Thumbnails