
சமீபத்தில் என் இரும்புக் குதிரையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு நண்பனைப் பார்க்கப் போனேன்.
அவன் கடை மெயின் ரோட்டிலேயே இருப்பதால்... ரோட்டைக் கிராஸ் பண்ணிப் போக வேண்டிய நிலை.
சர்ர்ர்ர்ர்...! புர்ர்ர்ர்ர்...! என்று ஒரே வாகன சந்தடி...
நான் எப்பவும் ரோடு என்று வந்தாலே... சர்வ ஜாக்கிரதையாகத்தான் என் வீல்சேரை கையாளுவேன்.
சாலையின் இரு புறமும் சற்று நேரம் கவனித்துவிட்டு...
வாகனங்கள் வராத சின்ன கேப்பில்....
சர்ரென்று என் குதிரையை செலுத்தினேன்.
பாதி ரோடு கிராஸ் பண்ணியிருப்பேன்.
அப்பத்தான் அது நடந்தது.
(சரிடா..! பில்டப் போதும்டா...! மேட்டருக்கு வா..!)
என் பாக்கெட்டில் செல்ஃபோன் கத்த ஆரம்பிச்சுது.
செம்ம டென்ஷன்..! இந்நேரத்துல யாரு..?
சரி மொதல்ல ரோட்டை கிராஸ் பண்ணுவோம்.
அப்புறமா யாருன்னு பாப்போம்-ன்னு எப்பிடியோ கிராஸ் பண்ணி முடிச்சுட்டு ஒரு பாதுகாப்பான இடத்துல நிறுத்திட்டு...
ம்ஹ்ம் அப்பவும் செல் சத்தம் ஓயலை.
அவசரமா எடுத்துப் பாத்தா,...
எதோ ஒரு செல் நம்பர்தான் டிஸ்ப்ளே ஆகுது..!
யாராயிருக்கும்...? ஒரு வேளை முதலாளியோ..?
இல்லாட்டி வேறு யாராவது முக்கியமான விஷயமாய் அழைப்பார்களோ?
சரி... பாப்போம்- என்று ஆன் பண்ணி காதில் வைத்து "ஹலோ" என்றேன்.
(நான் ரோட்டை கிராஸ் பண்ணது, செல் அடிச்சது... சிந்தனை, எடுத்து பேசினது வரை எல்லாமே 45 வினாடி சமாச்சாரமுங்க..!)
எதிர் முனையில வந்தக் குரலை கேட்டுட்டு.... வந்துச்சு பாருங்க எரிச்சல்.
"உங்களுக்கு இந்த் சேவை வேண்டுமா..? எண் 5- ஐ அழுத்துங்க. அந்த சேவை வேணுமா எண் 6- ஐ அழுத்துங்க?"
எனக்கு வந்த கோபத்துக்கு செல்போன் கம்பெனிக்காரன் மட்டும் எதிர்ல மாட்டியிருந்தான்னா...
கொரவளைய கடிச்சுத் துப்பியிருப்பேன். (சும்மா பேச்சுக்குத்தாங்க...! நிஜமாவே கால்ல விழுந்து கெஞ்சியிருப்பேன். எதுக்கு வம்பு?)
இந்த அனுபவம் அப்ப மட்டும்தான்-னு இல்லைங்க.
என்னிடம் ஏர்செல், ரிலையன்ஸ் என்று 2 எண்கள் உண்டு.
சமயத்துல ரொம்ப அதி முக்கியமான வேலையில் இருப்போம்.
ரொம்ப முக்கியமா யாருக்கிட்டயாவது பேசிக்கிட்டு இருப்போம்.
அப்பதான் ஒரு அனாமதேய எண்ணிலிருந்து கால் வரும்.
முன்னாடில்லாம் இது போல சிறப்புச் சலுகைகளை அறிவிக்க என்றே 5 இலக்க எண்கள் இருக்கும்.
5 இலக்க எண் என்றாலே நாம் தெரிந்து கொண்டு, தேவை இல்லைன்னா எடுக்காமலே கட் பண்ணிருவோம்.
இப்ப இதுக்குன்னே வெவ்வேறு 10 இலக்க செல்ஃபோன் எண்களிலிருந்து இம்சைகள் வந்தபடி இருக்கின்றன.
என் ரிலையன்ஸ் மொபைலில் ஒருநாளைக்கு 10-க்கு மேற்பட்ட SMS- கள். எல்லாமே அந்த ஆஃபர்... இந்த ரீசார்ஜ் ஆஃபர் என்பதாகத்தான் இருக்கும்.
இதுகளை எரேஸ் பண்றதுக்குள மண்டை காய்ஞ்சிடும்.
ஏனுங்க பாஸ்..!
இந்த மாதிரி கஷ்டம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கா?
இந்த இம்சை அழைப்புகளைத் தடுக்க எந்த கன்ஸ்யூமர் கோர்ட்டும் இல்லையா?
ஒரு கம்பெனியின் சிம்கார்டு வாங்குகிறோமென்றால் இந்த இம்சைத் தலைவலிகளை பொறுத்துக் கொண்டுதான் ஆகணுமா?
நமக்குன்னு தேர்ந்தெடுக்கற உரிமை எல்லாம் இல்லையா?
சொல்லுங்க பாஸ்...? சொல்லுங்க...?
"அப்பிடியே இங்க க்ளிக் பண்ணி இந்த ரகசிய வீடியோக் காட்சியையும் கொஞ்சம் பாத்துட்டு போயிடுங்க பாஸ்...! "
![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
4 comments:
இதுபோல எனக்கும் சங்கடங்கள் வந்தது..
//கொரவளைய கடிச்சுத் துப்பியிருப்பேன். (சும்மா பேச்சுக்குத்தாங்க...! நிஜமாவே கால்ல விழுந்து கெஞ்சியிருப்பேன். எதுக்கு வம்பு?)//
நல்லா எழுதியிருகிங்க சம்மந்தபட்டவர்கள் படித்தால் நன்றாக இருக்கும்...
ஆ.ஞானசேகரன் said...
//இதுபோல எனக்கும் சங்கடங்கள் வந்தது..
//கொரவளைய கடிச்சுத் துப்பியிருப்பேன். (சும்மா பேச்சுக்குத்தாங்க...! நிஜமாவே கால்ல விழுந்து கெஞ்சியிருப்பேன். எதுக்கு வம்பு?)//
நல்லா எழுதியிருகிங்க சம்மந்தபட்டவர்கள் படித்தால் நன்றாக இருக்கும்...//
படிப்பாய்ங்கங்கறீங்க..? ம்ஹம்.
எனக்கு நம்பிக்கை இல்லை. ஏதோ ஊதற சங்கை ஊதி வைச்சுட்டோம்.
ஹப்பா..! இப்பவே கண்ணைக் கட்டுது.
நானே இதுமாதிரி ஒரு பதிவு போடணும்னு இருந்தேன்...முந்திக்கிட்டீங்களே Antony!!!!
அன்புடன் அருணா
இதை தவிர்ப்பதற்கு உங்கள் இந்த பதிவு உதவும் நண்பரே
http://gouthaminfotech.blogspot.com/2009/04/blog-post_20.html
Post a Comment